Saturday, October 8, 2022

தேடுகிறேன்...

 

ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன்.

அது கடு மலை கடல் அல்ல.

தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!

Friday, January 14, 2022

பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்

 பஞ்சமி

நிலத்தை

பறிகொடுத்தவனிடம்

கேளுங்கள்


ஒரு ஏக்கர்

பூமியையும்

எட்டுவழி

சாலைக்கு

இழந்தவனிடம்

கேளுங்கள்


மகளின்

கல்யாணத்திற்க்காக

வட்டிகாரனிடம்

வயலை இழந்த

தந்தையிடம்

கேளுங்கள்


பொங்கலின்

சுவை என்னவென்று!


வா தோழனே

இனி ஒரு

பொங்கல் படைப்போம்


உழைத்தவனை

சுரண்டி வாழும்

அதிகார வர்க்கத்தையே படையலிட்டு


இனி ஒரு 

பொங்கல் படைப்போம்...


அனைவருக்கும் இனிய 

பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்


தோழமையுடன்

ஆமையடி அப்துல்லா

Tuesday, December 21, 2021

அம்மா

 

அவளின்

கைக்குள் இருந்தவரை

நினைத்ததில்லை!

 

என் கைகளுக்கு

சிறகு முளைத்தபிறகு

மறந்ததில்லை!! 

 

கட்டிய கூட்டின்

வெறுமைகண்டு

வாழ பிடிக்கவில்லை

என்னோவோ!!!

 

தாய்க்குருவி

இரவெல்லாம்

கறைகிறது. 

 

பறக்கும் தூரம்தான்

என்றிருந்தேன் 

கறைச்சல்

குறைவதாயில்லை

 

இப்போது

பறப்பது மட்டுமே

பாக்கி ...

Thursday, December 16, 2021

சாத்தானின் வேதம்

நரைத்து 

நடைதளர்ந்து 

தள்ளாடி

கைப்பிடிக்கு 

காத்திருந்தவன் 

காதில்

சாத்தன் ஓதியது


காத்திருப்பே 

காதலின் 

சுகமென்று.


கல்விமுறை (இன்று கண்ட காட்சி)

 

காம்போடு அம்மா துரத்த

பள்ளி பையோடு

ஓடியது குழந்தை

 

மாடடைபோல அடித்து 

இந்த புண்ணாக்கு 

கல்வியை 

திணித்தால் - அவன்

கொழுப்பானா

செழிப்பானா !

 

எல்லோரும்

இவர்களையே  பார்க்க

குழந்தையின்

மனநிலையை

புரிந்துகொண்ட

மாடு மட்டும்

அமைதியாய் நடந்தது  

Wednesday, December 15, 2021

ஒரு காதல் கதை



கடுங்குளிரில்

பெருங்கதவு

இடுக்குகளில்

அவளை

தேடுகிறேன்



சித்திரை

முழு நிலவில்

பார்த்தது



அவளின்

ஒற்றை பார்வைக்கு

நா சுரந்த

வியர்வையை - என்

நாடி நரம்பும்

சுரக்கிறது



பிரம்மன்

தொலைத்த

பேரழகி



அரேபியத்து

பைங்கிளி …



ஆம்

நான் காமன்

அவள் சோமன்



என்னைவிட

இரண்டங்குலம்

உயரமவள்



முத்தமிட்டு

முத்தமிட்டு

நாவாடியதற்கு



நட்ச்சத்திரங்கள் சாட்சி



பெருக்கெடுத்த

காமத்திற்கு

அம்புலி சாட்சி



அவள் சாதியை

நானும்

என் மதத்தை

அவளும்

கேட்டதே இல்லை



காதலும் காமமும்

வெண்ணிற அருவியாய்

புல் நனைத்த

அந்த இரவில்

அறிவித்தார்கள்

திங்களன்று

போட்டியென்று



போட்டிகளத்தில்

அவளும் நானும்

எதிரணியில்



இப்போது

ஒரே இலக்கு - அது

வெற்றி!



தோட்டா சத்தத்திற்காக

காத்திருந்த காதில்

மௌனமாய் சொன்னாள்

மௌனமாய் சொன்னாள்

மௌனமாய் சொன்னாள்

உன் வெற்றி

நம் வெற்றியென்று



காதலை சுமந்த

இதயத்திற்கு

கால்களுக்கு

கட்டளையிட

மனம்மில்லை



முன்னும் பின்னுமாய்

ஓடிக்கொண்டிருந்தோம்

முந்தட்டும்.

நின்று விட்டேன்



வெற்றிவிழா!

அவளை கொண்டாடி

மகிழ்தார்கள்

எனக்கு அழைப்பில்லை



அந்த பெருங்கூட்டத்தில்

அவள் கண்கள்

தேடியது என்னைத்தான்.



பெருங்கதவுகளின்

இடுக்குகளில்

அவளின் வெற்றியை

ரசித்து கொண்டே

நகர்ந்தேன்

அவளும் நகர்ந்தாள்



ஊட்டிக்கு வந்துபோன

நீங்கள் என்னை

கண்டிப்பாய்

பார்த்திருப்பீர்கள்



உற்றுப்பாருங்கள்

உங்கள் செல்ஃபீயில்

ஓரமாய் நான்

நிற்கக்கூடும்



இப்போது மீண்டும்

போட்டிக்கான

அறிவிப்பு



அவள்

கண்டிப்பாக

வருவாள்



என்னை

அலங்கரித்து

அவளுக்காய்



அந்த பெரும்

மைதனத்தின்

வாசலருகே

காத்திருக்கிறேன்...



இப்போது

என் பிராத்தனை

ஒன்றே ஒன்றுதான்

கண்டிப்பாய் அவள்

வெற்றிப்பெற வேண்டும்



என்னைப்போல

ஊட்டி வீதிகளில்

அனாதையாய்

சுற்றித்தெரியும்

குதிரைகளின்



பெயரில் அவள்

பெயர்யில்லாமலிருக்க

அவள் கண்டிப்பாய்

வெற்றிபெற வேண்டும்



(இது பந்தயத்தில் தோல்வியடைந்து ஊட்டி தெருக்களில் சுற்றித்திரியும் ஒரு குதிரையின் காதல் கதை)

விற்பனைக்கு ...

 
மலை குடைந்து 
குளிரும் !

மரம் அழித்து
காற்றும் !!

ஆழ்துளையில்
தண்ணீரும் !!!
தேடிக்கொண்டிருக்கிறோம்
 
மலை
வீடானது

மரம்
காதவானது

ஆழ்துளை
குழந்தைகளால்
நிரம்பிக்கிடக்கிறது
 
எஞ்சிய
தண்ணீரும்
காற்றும்
குழந்தையும் 
விற்பனைக்கு .

 

தேடுகிறேன்...

  ஒழிந்துகொள்ள ஒரு இடம் தேடுகிறேன். அது கடு மலை கடல் அல்ல . தனிமையே இல்லாத ஒரு நண்பர் கூடடத்தை!